Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இக்ஸிகோ நிகர லாபம் ரூ.63 கோடி

இக்ஸிகோ நிகர லாபம் ரூ.63 கோடி

நிறுவனத்தின் காலாண்டு மொத்தப் பரிவர்த்தனை மதிப்பு 22 சதவீதம் அதிகரித்து ரூ.5,304 கோடியானது.

பகிரவும் WhatsApp Facebook

ஹோட்டல் முன்பதிவு வணிகத்தின் வலுவான வளர்ச்சி, ஃபிரெஷ்பஸ் நிறுவனப் பங்குகளின் பகுதி விற்பனை ஆகியவற்றின் உதவியுடன், இக்ஸிகோ நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் ரூ.63.42 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபம் ஈட்டியுள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் இந்நிறுவனம் ரூ.3.46 கோடி நிகர இழப்பைச் சந்தித்திருந்தது.

நடப்பு 2026–27 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், செயல்பாட்டு வருவாய் ரூ.284.23 கோடியிலிருந்து ரூ.320.96 கோடியாக உயர்ந்தது. மொத்தச் செலவுகள் ரூ.291.89 கோடியிலிருந்து ரூ.309.51 கோடியாக அதிகரித்தன.

ஹோட்டல் முன்பதிவுகளின் மொத்தப் பரிவர்த்தனை மதிப்பு, ஆண்டுக்கு ஆண்டு 159 சதவீதம் உயர்ந்து ரூ.111.34 கோடியை எட்டியது. ஹோட்டல் வணிக விவரங்களைத் தனிப் பிரிவாக நிறுவனம் முதல்முறையாக வெளியிட்டுள்ளது.

நிறுவனத்தின் காலாண்டு மொத்தப் பரிவர்த்தனை மதிப்பு 22 சதவீதம் அதிகரித்து ரூ.5,304 கோடியானது. செயல்பாட்டு வருவாய் 13 சதவீதம் வளர்ந்துள்ளது.

ஃபிரெஷ்பஸ் பங்குகளின் பகுதி விற்பனையால் இதுவரை இல்லாத அளவுக்கு நிகர லாபம் பதிவானதாக நிறுவன நிர்வாகிகள் தெரிவித்தனர். நீண்டகால வளர்ச்சிக்காக ஹோட்டல் வணிகம் மற்றும் செயற்கை நுண்ணறிவில் தொடர்ந்து முதலீடு செய்வதாகவும் அவர்கள் கூறினர்.

முந்தைய செய்தி
1,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதலுக்கு ஒப்பந்தப்புள்ளி
அடுத்த செய்தி
500 கிலோ எடையைத் தூக்கும் 13 அடி உயர ரோபோ! நோக்கம் என்ன?

தொடர்புடைய செய்திகள்